மயிலாடுதுறையை அடுத்த அச்சுதராயபுரத்தில் உள்ள கவுரி மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த கோயிலின் 57-ம் ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த 23-ம் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதியை ஒடி, பக்தர்கள் காவிரிக் கரையில் இருந்து மேளதாளம் வாத்தியங்கள் முழங்க காவடி மற்றும் கரகங்களை சுமந்து வந்து கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.