சென்னை திருவொற்றியூரிலுள்ள வடிவுடையம்மன் கோவிலில் வடக்கு நோக்கி வீற்றிருக்கும் வட்டப்பாறை அம்மன் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை ஒட்டி, கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம் பால் உள்ளிட்டவைகளைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்கள் முன்னிலையில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வரும் 7-ம் தேதி வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்களுடன் சுவாமி வீதி உலா நடைபெறும்.