இந்து திருமண சட்டப்படி, முறையான சடங்குகள் இல்லாத திருமணங்களை அங்கீகரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
விமானிகளாக பணியாற்றும் ஒரு ஆணும், பெண்ணும் முறையான இந்து திருமண சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர், அவர்கள் விவாகரத்து கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு, பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
இளைய தலைமுறையினர் இந்து திருமண சட்டப்படி எவ்வித முறையான சடங்குகளும் இல்லாமல் கணவன்-மனைவி அந்தஸ்தை பெறுவதை தாங்கள் நிராகரிப்பதாக, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சடங்குகள் இல்லாமல் நடத்தப்படும் திருமணத்தை இந்து திருமண சட்டத்தின் 7-வது பிரிவின்படி, இந்து திருமணமாக கருத முடியாது எனவும்,
திருமண சடங்குகள் இல்லாமல் வெறும் திருமணப் பதிவு சான்றிதழ் பெற்றாலும், அது திருமண அந்தஸ்தை உறுதி செய்யாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மனுதாரர்கள் இந்து திருமண சட்டப்படி திருமணம் செய்யாததால், முறையான சடங்குகளின்றி அவர்கள் பெற்ற திருமணப் பதிவு சான்றிதழ் செல்லாது எனவும்,
அவர்களது விவாகரத்து வழக்கு ரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் கூறினர்.