குறைந்த மாணவர் சேர்க்கையை காரணமாகக் காட்டி அரசுப் பள்ளிகளை மூட வேண்டாமென தமிழக ஆரம்பப்பள்ளி கூட்டணி பொதுச் செயலாளரும், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருமான இரா.தாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நாகையில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தபின் இரா.தாஸ் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அனைத்து இயக்கங்களையும் ஒன்றிணைத்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.