உதகையில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரியில் கோடை வெயில் காரணமாக ஏரிகளில் தண்ணீர் குறைந்து வருவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் லவ்டேல் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக்கூறி பொதுமக்கள் காவல்நிலையம் முன்பு காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபின் போராட்டம் கைவிடப்பட்டது.