புதுச்சேரி கரசூர் பகுதியில் காய்ந்த சருகுகள் திடீரென தீ பற்றி எரிந்தது.
கரசூர் சாலை அருகே தேக்கு மர தோப்பின் ஒரமாக கிடந்த சருககள் தீ பிடித்து ஏரிந்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற சேதராபட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால், பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.