சென்னை கூடுவாஞ்சேரி அருகே கல்குவாரியில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த ஐந்து பேர் கூடுவாஞ்சேரி அருகே கீரப்பாக்கத்தில் உள்ள கல் குவாரியில் குளித்துள்ளனர்.
அப்போது, அவர்களுக்கு நீச்சல் தெரியாததால், நீரில் மூழ்கியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் ரப்பர் படகு மூலம் தேடி வந்தனர்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விஜய்சாரதி என்ற மாணவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
மற்றவர்களின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, சென்னை மெரினா கடற்கரை கமேண்டோ வீரர்களும், தேடும் பணியில் இணந்துள்ளனர்.