நாகையில் இயங்கி வந்த அரசு தலைமை மருத்துவமனையை இடமாற்றம் செய்ததை கண்டித்து பொது மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூரில் கடந்த 2022 -ஆம் ஆண்டு புதிய மருத்துவக் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் 24 -ஆம் தேதி, எட்டு கிலோமீட்டர் தூரமுள்ள ஒரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இதனால், அவசர சிகிச்சை பெறமுடியாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், அரசு தலைமை மருத்துவமனையை இடமாற்றம் செய்ததை கண்டித்தும், தலைமை மருத்துவமனையை அதே இடத்தில் செயல்படுத்த வலியுறுத்தியும், 500 -க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.