திருப்பூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோடங்கிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு, கனிம வளங்களைக் கொள்ளையடித்ததாக அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கல் குவாரி உரிமையாளர் மீது குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டுமெனவும், அதற்கு உடந்தையாக இருந்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.