கோவையில் மின் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
ரொட்டிக்கடை பகுதியில் இயங்கி வரும் அக்ரோ எஸ்டேட் நிறுவனத்தில் வீரமணி, தன்ராஜ் ஆகிய இருவர் பணியாற்றி வந்தனர்.
இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து விளக்கம் அளிக்கக்கோரி வீரமணிக்கு நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.
இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் அப்பகுதியில் உள்ள மின் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தி வீரமணியை பத்திரமாக மீட்டனர்.