கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே தந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
கடுக்கரை ஆலடி காலனியைச் சேர்ந்த சுரேஷ் குமார், தனது மூத்த மகள் ஆர்த்தியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சுரேஷ்குமார் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
அப்போது குடிபோதையில் தனது தந்தை உயிரிழந்துவிட்டதாக ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், குடிபோதையில் தாக்க முயன்றதால் மகளே, தந்தையை கழுத்தை நெறித்துக் கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து இளம்பெண் ஆர்த்தியை போலீசார் கைது செய்தனர்.