தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நிழற்குடை ஏதுமில்லாததால் நீண்ட நேரம் வெய்யிலில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
இந்நிலையில் குரு பெயர்ச்சியையொட்டி அதிகளவிலான பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக கோயிலில் குவிந்திருந்தனர்.
அப்போது நிழற்குடைகள் ஏதும் அமைக்கப்படாததால், பக்தர்கள் கோடை வெயிலில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.