கள்ளக்குறிச்சியில் பக்கத்து வீட்டுக்காரரின் வளர்ப்பு நாய் குரைத்ததால் அரிவாளுடன் சென்று கொலை மிரட்டல் விடுக்கும் மண்டல துணை வட்டாட்சியரின் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புத்துமாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கொளஞ்சியப்பம். இவருக்கும் மண்டல துணை வாட்டாட்சியர் சிலம்பரசனுக்கும் தவறான வாரிசு சான்றிதழ் வழங்கியது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கொளஞ்சியப்பனின் வீட்டு நாய் தெருவில் சென்று கொண்டிருந்த நாய்களை பார்த்து குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் அரிவாளுடன் கொளஞ்சியப்பன் வீட்டின் முன் வந்ததோடு, அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து காலல்நிலையத்தில் கொளஞ்சியப்பன் புகார் அளித்துள்ள நிலையில், தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.