தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அமித்ஷா,
கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் முடிவுகள் அமையும் என்று தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்படுவதாகவும் அமித்ஷா குற்றம்சாட்டினார்.
ராகுல் காந்தி மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக பொய் பேசி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.