கோடை வெயில் காரணமாக நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நீலகிரியில் உள்ள அணைகளில் இருந்து கோவையின் பல்வேறு பகுதிகளுக்கு நீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கோவை மாவட்டத்தின் பில்லூர் அணை கோடை வெயில் காரணமாக வறண்டு காணப்படுகிறது.
இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நீலகிரி மாவட்டத்திலுள்ள அப்பர் பவானி, போர்த்தி மந்து உள்ளிட்ட அணைகளில் இருந்து கோவைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்மூலம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.