கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க தமிழக அரசின் முதன்மை செயலாளர் கார்த்திகேயன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேட்டுப்பாளையத்தில் கடும் வறட்சி காரணமாக பவானி ஆறு வறண்டதால், குடிநீர் முறையாக விநியோகிக்க முடியவில்லை.
இந்நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்குவது குறித்து, மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நான்கு மாவட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.