கரூரில் உள்ள மலையாள பகவதி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தூக்கு தேரோட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது.
கிருஷ்ணராயபுரத்தில் அமைந்துள்ள மலையாள பகவதி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற தேர் திருவிழாவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தோளில் தேரை சுமந்து சென்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.