திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் வன விலங்குகள் தாகத்தை தீர்த்துக் கொள்ள அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
சிறுமலை வனப்பகுதியில் காட்டெருமை, கேளையாடு உள்பட அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் கோடை வெயிலை கருத்தில் கொண்டு, திண்டுக்கல் மாவட்ட வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறுமலை ஊராட்சி ஆகியவை இணைந்து, சிறுமலை சாலையில் உள்ள 10 கொண்டை ஊசி வளைவுகளில் தண்ணீர் தொட்டிகள் அமைத்துள்ளன.
இங்கு தினசரி தண்ணீர் நிரப்பப்படவுள்ளதால் வனவிலங்குகளின் தாகம் தணிய வழிவகை ஏற்பட்டுள்ளது.