கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே யானை மிதித்து பலியான விவசாயியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் முதற்கட்ட நிதியுதவி வழங்கப்பட்டது.
மேடுமுத்துக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி அப்பய்யா என்பவர், காலையில் விவசாயத் தோட்டதிற்கு சென்றபோது ஒற்றை யானை தாக்கியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ஓசூர் எம்எல்ஏ ஒய். பிரகாஷ், அப்பய்யா குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் எம்எல்ஏ வழங்கினார்.