தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கொடைக்கானலில் படகு சவாரி செய்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தாருடன் கொடைக்கானலில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில், கொடைக்கானல் ஏரியில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் படகு சவாரி செய்தார். பின்னர், அவருடன் படகு குழாமிற்கு வெளியே காத்திருந்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.