ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே மண் பரிசோதனை செய்வது குறித்து விவசாயிகளுக்கு, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சத்தியமங்கலம் அடுத்த ஜே.கே.கே முனிராஜ வேளாண் அறிவியல் கல்லூரியில் வேளாண் துறை நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களின் சார்பில், விவசாயிகளுக்கு மண் பரிசோதனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
அந்த வகையில், ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் சத்தியமங்கலம் அடுத்த உக்கரம் கிராமத்தில் உள்ள விவசாயிகளை சந்தித்து, மண்ணின் தன்மையை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து மண் பரிசோதனை செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.