கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியில் உள்ள சிக்னல்களில் அரசு சார்பில் பசுமைப் பந்தல் அமைக்கப்பட்டது.
புதுச்சேரி பகுதியில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வரும் நிலையில் பொதுமக்களின் வசதிக்காக சிக்னல்களில் பசுமைப் பந்தல் அமைப்பதில் அரசியல் கட்சியினரிடயே போட்டி நிலவி வந்தது.
இதனால் பொதுப்பணித்துறை சார்பில் புதுச்சேரி அரசு பொதுமக்களுக்காக பசுமைப்பந்தல் அமைத்தது. அப்போது கடந்த வருடம் அமைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் பெயர்கள், சின்னங்களை தேர்தல் விதிமுறைகள் காரணமாக அகற்றப்பட்டது.