திரிபுரா மாநிலம், கவுகாத்தியில் நடைபெறும் கூட்டுறவு வங்கி தேர்வில் பங்கேற்பதற்காக அசாம் மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 36 பேர் பேருந்தில் சென்றுள்ளனர்.
அப்போது, டிமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் தடுப்புச் சுவரில் மோதிய பேருந்து நிலை தடுமாறி குப்புறக் கவிழ்ந்தது. இதில் பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்தனர்.