ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயம் அடைந்தனர்.
பரமக்குடி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து தேவர்குறிச்சி என்னும் இடத்தில் இரு சக்கர வாகனம் மீது மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஓட்டுநர், நடத்துனர் உட்பட 17 பயணிகள், லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.