தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் படுகாயமடைந்தனர்.
மதுரை மாவட்டம், சங்கிமங்கலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் சுற்றுலா வேனில், எப்போதும் வென்றான் சோழசாமி கோயில் சித்திரை திருவிழாவிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் கீழஈரால் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் சென்டர் மீடியனில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் 13 பேர் படுகாயம் அடைந்த நிலையில், சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.