சேலம் தீவட்டிப்பட்டியில் கோயில் திருவிழாவின் போது இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு, கல்வீச்சு என அரங்கேறிய சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே நடந்த கோயில் திருவிழாவில், ஒரு பிரிவினரை அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால், இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும், வன்முறையின் போது கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதற்றம் அதிகரித்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க தடியடி நடத்தினர். மேலும், கிராம மக்களிடம், வட்டாட்சியர் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால், இரு பிரிவினரிடையே நாளை மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.