மயிலாடுதுறை அருகே மும்முனை மின்சாரம் வழங்காத மின்சார வாரியத்தை கண்டித்தும், அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு தமிழக அரசு வழங்கிய மும்முனை மின்சாரம் மூலம் மின்மோட்டார் உதவியுடன் நிலத்தடி நீரை பயன்படுத்தி 90 ஆயிரம் ஏக்கரில் குருவை சாகுபடி செய்யப்பட்டன.
ஆனால், இந்த ஆண்டு விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை துவங்கிய நிலையிலும் இதுவரை மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை.
இதனை கண்டித்து, மயிலாடுதுறை – கும்பகோணம் பிரதான சாலையில், விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தடையில்லா மின்சாரம் விநியோகிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.