விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ரேஷன் கடை இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சின்னக்கொல்லப்பட்டியில் செயல்பட்டு வந்த ரேஷன் கடையின் மூலம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நான்கு கிராம மக்கள் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில் இந்த ரேஷன் கடை சிதிலமடைந்ததால், தெற்கூருக்கு அருகே புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு திறக்கப்பட்டது. பின்னர் அதன் மூலமாகவே ரேஷன் பொருட்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் பழைய ரேஷன் கடை மூலமாகவே மீண்டும் பொருட்களை விநியோகிக்க வேண்டும் என கூறி கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.