“கோவாக்சின் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது” என்று பாரத் பயோ டெக் நிறுவனம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பரவி வந்த கொரோனா நோயைக் கட்டுப்படுத்த கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை பொதுமக்கள் போட்டுக் கொண்டனர்.
ஆனால், தடுப்பூசி குறித்து சிலர் சந்தேகம் எழுப்பினர். இந்நிலையில், “கொரோனாவை கட்டுப்படுத்தவே கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது எனவும், இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்றும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என அதன் தயாரிப்பு நிறுவனம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.