சீக்கிய வழிபாட்டுத் தலமான ஹேம்குண்ட் சாஹிப்பை சுற்றி மலைபோல் குவிந்து கிடந்த பனிக்கட்டிகளை இந்திய ராணுவ வீரர்கள் அகற்றினர்.
குருத்வாரா ஸ்ரீ ஹேம்குண்ட் சாஹிப் ஜி என்று அழைக்கப்படும் ஹேம்குண்ட் சாஹிப், இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சாமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய சீக்கிய வழிபாட்டுத் தலமாகும்.
இந்த புனித தலம் கடல் மட்டத்திலிருந்து நான்கு ஆயிரத்து 632 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஏழு பனி மூடிய சிகரங்களால் சூழப்பட்டுள்ளது.