ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்துவோர் தொடர்பாக தமிழ்நாடு அரசு உத்தரவொன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் வாய்ப்பு, பந்தயம் போன்றவற்றை விளம்பரப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதாகைகள், வெளிப்புற ஊடகம், ஆன்லைன் மூலம் விளம்பரப்படுத்துவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுவோருக்கு 3 மாதம் சிறை அல்லது 5000 அபராதம் விதிக்கப்படும் எனவும், ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டுகள் பரிவர்த்தனையில் ஈடுபடும் நிதி நிறுவனங்கள் தடை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது