சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் தடை செய்யப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ஜூன் 4-ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதியும், 2வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதியும் நடைபெற்றது.
தமிழ்நாடு, அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் முதற்கட்டமாகவும், அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர், ஜம்மு-காஷ்மீரில் இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது.
3ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதியும், 4ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 13ஆம் தேதியும், 5ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 20ஆம் தேதியும், 6ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதியும், 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இந்நிலையில், சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் தடை செய்யப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ஜூன் 4-ஆம் தேதி வரை டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.