வேலூர் மாவட்டம், குடியாத்தம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. வெயில் 110 டிகிரியை தாண்டிய நிலையில், கடும் அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் இன்று மாலை மேல் ஆலத்தூர், கூடநகரம், சின்னசேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால், கடும் அனல் காற்றால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.