குறையும் வெளிநாட்டு வேலை மோகம்!
Sep 18, 2025, 12:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குறையும் வெளிநாட்டு வேலை மோகம்!

Web Desk by Web Desk
May 3, 2024, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாட்டு வேலை மோகம் இந்தியர்களுக்கு குறைந்து கொண்டே வருகிறது. உலக அளவில் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணிபுரிய விரும்பும் இடமாகவும் இந்தியா உள்ளது. இந்த தகவலை உலக அளவில் பிரபல ஆலோசனை நிறுவனமான (பிசிஜி) பாஸ்டன் கன்சல்டிங் குரூப், தனது ஆய்வறிக்கையில் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் வேலை கிடைத்தால் வாழ்க்கையில் விரைவாக முன்னேறி விடலாம் என்று இளைஞர்களுக்கு எண்ணம் வந்த காலங்கள் உண்டு. சிறந்த வேலைவாய்ப்பு, அதிக ஊதியம், ஆகிய காரணங்களுக்காக ,வளர்ந்த மேற்கத்திய நாடுகள் மட்டும் இல்லாமல் துபாய், சிங்கப்பூர், சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கும் இந்திய இளைஞர்கள் வேலைக்காக செல்வதுண்டு.

இந்த நிலை கடந்த சில ஆண்டுகளாக வெகுவாக குறைந்து வருகிறது. உலக அளவில் பிரபலமான ஆலோசனை நிறுவனமான (பிசிஜி) பாஸ்டன் கன்சல்டிங் குரூப் ‘சர்வதேச மொபிலிட்டி ட்ரெண்ட்ஸ்’ ஆய்வு ஒன்றை நடத்தியது.

அந்த ஆய்வு அறிக்கையின்படி, வெளிநாடுகளில் பணிபுரிய விரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு 78 சதவீதமாக இருந்த நிலை மாறி, 2023 ஆம் ஆண்டில் 54 சதவீதமாக குறைந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.

வெளிநாட்டில் வேலை செய்ய விருப்பம் இருந்தபோதிலும், 59 சதவீத இந்தியர்கள் தாய் நாட்டில் மீதான உணர்ச்சிப் பூர்வமான பற்றுதல் காரணமாக புலம் பெயர விரும்பவில்லை என்று கூறி உள்ளனர். இது மற்ற நாடுகளை விட சராசரியான 33 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பணிபுரிய விருப்பமான நாடுகளின் பட்டியலில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக இந்தியாவில் வேலை செய்ய விரும்புவோரின் விருப்பமான நகரங்களாக பெங்களூரு மற்றும் டெல்லி ஆகிய நகரங்கள் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகின்றன.

இந்த ஆய்வறிக்கை வெளியிட தொடங்கிய ஆண்டில் இருந்து , முதன்முறையாக பணிபுரிய விரும்பும் 100 நகரங்களின் வரிசைக்குள் அகமதாபாத் இடம் பெற்றுள்ளது. வேலைக்கு எந்த நாட்டுக்கு செல்வீர்கள் என்ற கேள்விக்கு ,இந்தியாவை வேலைவாய்ப்புக்கு தகுந்த நாடாக வெளிநாட்டினர் பலர் தெரிவித்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் பணியாற்றுவதில் மிகுந்த ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். நைஜீரியா மற்றும் கென்யாவைச் சேர்ந்தவர்களும் இந்தியாவையே தங்கள் விருப்பமாக சொல்லி இருக்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் உலக அரங்கில் இந்தியாவின் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. உள்நாட்டில் மட்டுமின்றி, உலக அளவிலும் ஆற்றல்மிக்க தொழில் வாய்ப்புகளைத் தேடும் வல்லுநர்களுக்கு இந்தியா ஒரு கலங்கரை விளக்கமாக உருவெடுத்துள்ளது என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.

இது மட்டுமல்லாமல் இன்னொரு முக்கிய தகவலையும் இந்த ஆய்வு வெளி கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 25 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர்.

இதில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் nri 13.6 மில்லியன் என்றும் , இந்திய வம்சாவளியினர் 18.68 மில்லியன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் பங்களிப்பில் இந்தியா முக்கிய இடத்தைக் கொண்டிருக்கிறது என்று பிசிஜி ஆய்வறிக்கை கூறி உள்ளது.

188 நாடுகளைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் பேர்களிடம் கேட்டு , பெற்ற பதில்கள் மூலம் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பலருக்கு வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வது ஒரு கனவாகவே இருக்கிறது. தொழில் திறமை உடைய வல்லுநர்களில் 23 சதவீதத்தினர் பிற நாடுகளில் தீவிரமாக வேலை தேடுகிறார்கள்.

வெளிநாட்டு வேலை என்பதற்கு காரணமாக பொருளாதார வளர்ச்சியே முதல் காரணமாக பலருக்கு இருக்கிறது . இரண்டாவது காரணமாக தொழில் திறமை வளர்ச்சி மற்றும் வேலை அனுபவம் இருக்கிறது என இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

என் பிள்ளைக்கு வெளிநாட்டில் வேலை என்பது ஒரு காலத்தில் பெருமையாக இருந்தது . இப்போது , என் தாய் நாட்டில் வேலை பார்ப்பது பெருமை என்ற நிலை இந்தியாவில் உருவாகி இருக்கிறது.

என்ன வளம் இல்லை இந்நாட்டில்…. ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில் என்ற பழைய பாடலின் உண்மை, இந்திய இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பதையே இந்த பிசிஜி ஆய்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

Tags: Falling foreign work craze!
ShareTweetSendShare
Previous Post

GODREJ-ல் பாகப்பிரிவினை முடிவின் பின்னணி என்ன?

Next Post

‘3ல் ஒரு பங்கு கட்டாயம் பெண்களுக்கான ஒதுக்கீடு செய்ய வேண்டும்’! – உச்ச நீதிமன்றம் உத்தரவு

Related News

கிருஷ்ணகிரி : தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கொலை – இருவர் சரண்!

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : கழிவுநீர் வெளியேறிய பகுதிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்!

திருப்பூர் : சாலைகளில் மழை நீருடன் கலந்த கழிவு நீர் – பொதுமக்கள் அவதி!

பாகிஸ்தான் – சவுதி இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் – உன்னிப்பாக ஆராய்ந்து வரும் மத்திய அரசு!

பாகிஸ்தான் – சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies