ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான அந்நியச் செலாவணி மாற்று விகிதத்தை இன்று முதல் நடைமுறைப்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அந்நியச் செலாவணி விகிதத்திற்கான மாற்றங்கள் இன்று முதல் nநடைமுறைபடுத்தப்படுவதாக சுங்கச்சட்டம் அடிப்படையில் கடந்த மாதம் 18-ம் தேதி மத்திய நிதியமைச்சகம் அறிவித்தது.
இந்த செலாவணி விகிதங்களை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தீர்மானம் செய்துள்ளது, அதன் படி ஒரு பொருள் அமெரிக்க டாலரில் இருந்து இந்திய ரூபாயில் இறக்குமதி செய்யும் போது 84 ரூபாய் 35 காசுகளுக்கும், ஏற்றுமதி செய்யும் போது 82 ரூபாய் 90 காசுகளுக்கும் நிர்ணயம் செய்து இந்த திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.