ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்தினால் 1 வருடம் சிறை தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்துவோர் தொடர்பாக தமிழ்நாடு அரசு உத்தரவொன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் வாய்ப்பு, பந்தயம் போன்றவற்றை விளம்பரப்படுத்துபவர்களுக்கு 1 வருடம் சிறை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதாகைகள், வெளிப்புற ஊடகம், ஆன்லைன் மூலம் விளம்பரப்படுத்துவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுவோருக்கு 3 மாதம் சிறை அல்லது 5000 அபராதம் விதிக்கப்படும் எனவும், ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டுகள் பரிவர்த்தனையில் ஈடுபடும் நிதி நிறுவனங்கள் தடை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.