புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், 500 பக்க குற்றப்பத்திரிகையை, போக்சோ நீதிமன்றத்தில் முத்தியால்பேட்டை போலீசார் தாக்கல் செய்தனர்.
புதுச்சேரி சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த மார்ச் 2ஆம் தேதி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார்.
பின்னர் காணாமல் போன சிறுமி, 4 நாட்களுக்கு பிறகு கால்வாயில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 500 பக்க குற்றப்பத்திரிகையை ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்த முத்தியால்பேட்டை போலீசார், போக்சோ நீதிமன்றத்திலும் தாக்கல் செய்தனர்.
விரைவில் நீதிமன்றம் தனது விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.