இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.
வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜோ பைடன், சீனா, ஜப்பான், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் புலம் பெயர்ந்தோரை விரும்பவில்லை எனவும், இதனால் அந்த நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.
இது குறித்து விளக்கமளித்துள்ள வெள்ளை மாளிகை, அமெரிக்காவின் பன்முகத்துவத்தையும், அந்நாட்டின் வளர்ச்சியில் புலம்பெயர்தோரின் முக்கியத்துவத்தையும் விளக்கவே ஜோ பைடன் அவ்வாறு கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.