காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து அந்நாட்டுடனான அனைத்து ஏற்றுமதி, இறக்குமதியை நிறுத்துவதாக துருக்கி அரசு அறிவித்துள்ளது.
காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி கிடைக்க இஸ்ரேல் அரசு அனுமதிக்கும் வரை, இந்தத் தடை உறுதியாக நீடிக்கும் என துருக்கி வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசாவிற்கு தாங்கள் மனிதாபிமான உதவிகள் செய்வதை இஸ்ரேல் தடுப்பதாகக் குற்றம்சாட்டிய துருக்கி அரசு, கடந்த மாதம் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.