மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்கள் சேதமடைந்துள்ளன.
கடும் வெயில் காரணமாக, பெரியகுளத்தை அடுத்துள்ள ஊரடி ஊத்துக்காடு வனப்பகுதியில், காட்டுத் தீ எரியத் தொடங்கியது.
மிகவும் உயரமான வனப்பகுதி என்பதால் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
இந்த காட்டுத் தீயால், வனத்திலுள்ள அரிய மரங்குகளுக்கும், விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.