தென்காசியில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையன் படுகாயங்களுடன் தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வவிநாயகர்புரம் பகுதியில் வசித்து வரும் ராமசந்திரம் கோடை வெப்பத்தின் தாக்கத்தால் கதவை திறந்து வைத்தபடி தூங்கியுள்ளார்.
அப்போது வீட்டிற்குள் கொள்ளையன் புகுந்ததையடுத்து அவரை ராமசந்திரன் சரமாரியாக தாக்கியுள்ளார். சுதாரித்துக்கொண்ட கொள்ளையன் மாடியில் இருந்து கீழே குதித்து படுகாயமடைந்த நிலையில் தன்னுடன் வந்த கூட்டாளியோடு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளார்.