கேரளாவில் கோயில் திருவிழாவின்போது நடனமாடிக் கொண்டிருந்த மூதாட்டி தீடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூரில் அமைந்துள்ள கூடலை மகாவிஷ்ணு கோவில் திருவிழாவில் பெண்கள் திருவாதிரை நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுள் ஒருவராக நடனமாடிக் கொண்டிருந்த சதி என்ற மூதாட்டி திடீரென மயங்கி விழுந்தார்.
மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மூதாட்டி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.