கேரள மாநிலம், இடுக்கி அருகே மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செறுதோணி பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு, அரசு பூங்காவில் காவலாளியாக பணி புரிந்து வந்தார். விஷ்ணுவின் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், விஷ்ணு தன் முகநூல் பக்கத்தில் நேரலை வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விஷ்ணுவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.