சிபிஐ தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு வழக்குகளை சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, , மேற்கு வங்க அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ள வழக்கை மத்திய அரசு பதிவு செய்யவில்லை என்றும், அந்த வழக்கை சிபிஐ பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். சிபிஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படவில்லை என்றும் அவர் கூறினார்.