தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடும் வெப்பத்திற்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் கடும் வெப்ப அலை வீச கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெப்ப அலைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தெலங்கானா, கடலோர ஆந்திரா, குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப அலை வீசக் கூடும் எனவும், நாளையிலிருந்து வரும் 6-ம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாஇந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.