தாயின் காலை தொட்டு வணங்கி கடற்படை புதிய தளபதியாக அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடற்படை தளபதி ஹரிகுமார் பணியில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, 26-வது கடற்படை தளபதியாக அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி நியமிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த தாயின் அருகே சென்ற தினேஷ் குமார் திரிபாதி அவரின் காலை தொட்டு வணங்கினார்.
இதனையடுத்து மகனை கட்டியணைத்து தாயார் ஆசீர்வாதம் வழங்கினார். இதுதொடர்பான வீடியோ வைரல் ஆகி வருகிறது.