சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உடல்நலக் குறைவால் பலி!
Oct 27, 2026, 08:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உடல்நலக் குறைவால் பலி!

உணவில் பூச்சி மருந்து கலந்ததாக பேரன் கைது!

Murugesan M by Murugesan M
May 3, 2024, 01:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாமக்கலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்த நிலையில், அவர் சாப்பிட்ட உணவில் பூச்சி மருந்து கலக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியைச் சேர்ந்த பகவதி என்பவர், பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஓர் உணவகத்தில் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிச் சென்றுள்ளார்.

ஒரு பார்சலை தேவராயபுரத்தில் வசிக்கும் தாத்தா சண்முகநாதனுக்கு கொடுத்த நிலையில், அதில் பாதியை பகவதியின் தாய் நதியா சாப்பிட்டுள்ளார்.

அதிலிருந்து வித்தியாசமான வாசனை வந்ததை அடுத்து அவர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, தன் தந்தைக்கு போன் செய்து விசாரித்துள்ளார்.

ஆனால், அதற்குள் சண்முகநாதன் முழு உணவையும் சாப்பிட்டதால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

சிறிது நேரத்திலேயே நதியாவுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இருவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருந்த நிலையில், சண்முக நாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், உணவில் பூச்சி மருந்து கலந்திருந்தது தெரியவந்துள்ளது.

பகவதியின் காதல் விவகாரத்தை தாய் மற்றும் குடும்பத்தினர் கண்டித்ததால், அவர் உணவில் விஷம் கலந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, பகவதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Tags: Old man who ate chicken rice died of health problems!
Share
Tweet
SendShare
Previous Post

விவேகானந்தர் மண்பத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணாடி பாலம்!

Next Post

தாயின் காலை தொட்டு வணங்கிய கடற்படை தளபதி!

Related News

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies