கடந்த 3 மாதங்களில் விதிமுறைகளுக்கு மாறாக பயன்படுத்தியதாக இந்தியாவில் சுமார் 2 கோடி கணக்குகளை வாட்ஸ்ஆப் செயலி நீக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்களின் பாதுகாப்பு மற்றும் செயலியின் நம்பகத்தன்மை, தரத்தை மேம்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 2 கோடியே 23 லட்சத்து 10 ஆயிரம் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக, வாட்ஸ்ஆப் செயலி தனது இணையதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.