பாகிஸ்தான்-சீனா நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ராவல்பிண்டியில் இருந்து கில்கிட் நோக்கிப் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அதிவேகமாக சென்ற பேருந்து, டயமர் மாவட்டம் காரகோரம் நெடுஞ்சாலையில் உள்ள குனார் பண்ணை அருகே அதிகாலையில், திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குன்றின் மீது மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மீட்பு குழுவினர், காயமடைந்த பயணிகளை மீட்டு, அருகில் உள்ள சிலாஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.