சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் புறநகர் ரயில் சேவையின் நேரம் மாற்றியமைக்கப்பட்டால் வசதியாக இருக்குமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கடற்ரையில் இருந்து திருவண்ணாமலைக்கு மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில், இரவு 12 மணியளவில் திருவண்ணாமலையைச் சென்றடைகிறது.
இதேபோல், அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் புறநகர் ரயில், காலை 10.18 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை வந்தடைகிறது. இதற்கு கட்டணமாக 50 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவை பயணிகளிடையே வரவேற்வைப் பெற்றுள்ளது. இருப்பினும், நள்ளிரவு 12 மணிக்கு ரயில் திருவண்ணாமலையைச் சென்றடையும் நிலையில், அதனை இரவு 10 மணிக்குச் செல்வதுபோல் மாற்றியமைத்தால் நன்றாக இருக்குமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.